நாங்க இந்தியாவில் எதையும் மாற்ற மாட்டோம்.. இந்தியாவை மாற்றுவோம்..!!
இனி வருகின்ற ஆண்டில் இருந்து அனைத்து வகுப்பிற்கான பாட புத்தகத்திலும் “இந்தியா” என்ற பெயருக்கு பதிலாக “பாரத்” என்ற பெயர் இடம்பெற வேண்டுமென தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.ஆர்.டி) உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது..
காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் கூட்டணி உருவாக்கியதில் இருந்தே நாட்டின் பெயரை “பாரத்” என மாற்ற ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருவதாக பாஜக ஒன்றிய அரசு செயல்பட்டு சில தகவல்கள் வெளியாகின.., அதை செயல்படுத்தும் விதமாக டெல்லி ஜி20 மாநாட்டில் “இந்திய ஜனாதிபதி” என்பதற்கு பதில் “பாரத ஜனாதிபதி” என்றும் “இந்திய பிரதமர்” என்பதற்கு பதிலாக “பாரத பிரதமர்” என்றும் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது அது பெரும் பேசு பொருள் ஆனது..
இந்நிலையில் என்.சி.ஆர்.டி.யின் சமூக அறிவியல் பாடத்திற்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர் சி.ஐ.ஐசக் தலைமையிலான குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்.., இனி வரும் அனைத்து பாடப்பிரிவுகளிலும் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயர் பயன்படுத்த வேண்டும் என அறிக்கைவிடுத்துள்ளனர்..
பாரதம் என்ற பெயரின் அர்த்தம் :
பாரதம் என்ற பெயர் 7,000 ஆண்டுகளுக்கு முன் பழமையான விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் பாரதம் என்ற பெயர் இடம் பெற்று இருக்கும்.
மேலும் பாட புத்தகங்களில் இந்து மன்னர்களின் வெற்றியை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தற்போது நமது பாட புத்தகங்களில்.., இந்தியா என அச்சிடப்பட்டுள்ளது..
ஆனால் முகலாயர்கள், சுல்தான்களை நமது மன்னர்கள் வென்ற வரலாறு சொல்லவில்லை.., அதே சமயம் ஆங்கிலேயர்கள் இந்திய வரலாற்றை 3 கட்டங்களாக பிரித்து அவை பண்டைய, இடைக்கால மற்றும் நவீன இந்தியா என அழைத்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..