நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை..!!
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுதியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், நீண்ட கடற்கரைகளை கொண்ட நாடு இந்தியா என தெரிவித்த குடியரசு தலைவர் கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகமும், வளர்ச்சியும் பெருகி வருவதாக கூறினார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி முதலமைச்சர் வலியுறுத்தினார். சென்னையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் டெல்லி திரும்பும் போது குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீட் விலக்கு மசோதாவுக்கு தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை காத்திட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார். நீட் தேர்வால் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கடிதம் எழுதியதை முதலமைச்சர் நினைவூட்டினார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..