குடும்பத்திற்கு சொத்து சேர்க்காத பங்காரு..!! கோவில் உண்டியலில் இருந்து இதுவரை..? அப்பாவை பற்றி மகன் உடைத்த உண்மை..!!
மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட நாங்கள் எடுத்தது கிடையாது. மறைந்த பங்காரு அடிகளார் மகன் கோ.ப.செந்தில்குமார் நம் மதிமுகமிற்கு கொடுத்த பேட்டி..
மருத்துவம், கல்வி, ஆகிய இரண்டிற்கும் பங்காரு அடிகாளர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் மறைந்த பங்காரு அடிகளாரின் நிஜப்பெயர் சுப்பிரமணி, பங்காரு அடிகளாரின் மறைவிற்கு பின் மருவத்தூர் சக்தி பீடத்தை.., அவரின் இளைய மகன் செந்தில்குமார் கவனித்து கொள்ள இருக்கிறார், மேலும் தந்தையை போலவே நானும் கல்வி மற்றும் மருத்துவத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்ய 1500 ரூபாய் வாங்குவோம் காரணம் அந்த பணத்தை மொத்தமாக மருத்துவமனையின் நிர்வாக செலவுகளுக்கு கொடுத்து விடுவோம்..,
பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தில் ஒரு ரூபாய் கூட எங்களுக்காக செலவு செய்தது கிடையாது.., ஒரு சிலர் எங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என தெரிந்துக்கொள்ள பல வேலைகள் செய்யலாம், ஆனால் உண்மை என்னவென்று எங்களுக்கு தான் தெரியும்.
எனக்கும், என் அண்ணாவிற்கும் ஒரு ரூபாய் கூட சொத்து சேர்த்தது கிடையாது.. எங்களை படிக்க வைத்தது மட்டுமே அவர் எங்களுக்காக செய்தது.., எனக்கும் என் அண்ணா அன்பழகநிற்கும் நிறைய மனகசப்பு இருப்பதாக பலரும் சொல்லுவது உண்டு.., ஆனால் அவை அனைத்தும் பொய்..,
என் அண்ணா, நான் எல்லாம் ஒரே வீட்டில் தான் குடும்பத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம் எந்த முடிவு எடுத்தாலும் அவரிடம் கலந்து ஆலோசித்து விட்டுதான் எடுப்பேன்.. என அவர் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..