“மணப்பெண்” போல ஜொலிக்கனும்னா இப்படி பண்ணுங்க…!!
மணப்பெண் திருமணம் ஆக போகும் நாட்களில் எப்படி ஜொலிப்பார்களோ அப்படி ஜொலிக்க இந்த ஃபேஸ் பேக்கை அன்றாடம் குளிக்க போகும் முன் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வர, நல்ல இயற்கையாக பொலிவான சருமத்தை பெறலாம்.
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு – 25 கிராம்
கடலை பருப்பு – 25 கிராம்
அரிசி – 25 கிராம்
பாசி பயிறு -25 கிராம்
தயிர் – 25 கிராம்
செய்முறை:
இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு மைசூர் பருப்பு, கடலை பருப்பு , அரிசி, பாசிப்பயிறு ஆகிய பயிறுகளை ஒரு அரை மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பின்பு அரை மணி நேரம் கழித்து, நீரை வடிக்கட்டி.., மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த அந்த கலவையை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் கெட்டியான தயிர் எடுத்து கலந்து கொண்டு.., அத்துடன் சிறிது மஞ்சள் பொடியைச் சேர்த்து நன்றாக ஃபேஸ் பேக் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
திருமணம் ஆக போகும் பெண்கள் , இந்த கலவையை அன்றாடம் உடலில் ஒரு அரை மணி நேரம் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் ,
சருமம் பொலிவாக , கரும் புள்ளிகள் நீங்கி , மணப்பெண் போல ஜொலிப்பீர்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..