வீட்டில் தெய்வம் தங்க இதை செய்தால் போதும்..!!
வீட்டுக்குள் நேர்மறை ஆற்றல் நுழைய வீட்டு வாசலை கழுவி , அலங்கரித்து வைத்து கொள்ள வேண்டும்.
வீட்டு வாசலை சுத்தமாகவும் மங்களகரமகவும் வைத்துக் கொள்வது அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப நபர்களுக்கு சகல சௌபாக்கியங்கள் , செல்வ செழிப்பு , நற்பலங்களை அள்ளித் தரும்.
வாசலில் மா இலை வைத்து அலங்கரிப்பது நல்ல விசேஷமாகும்.
நேர்மறை ஆற்றலை அதிகரித்து வீட்டிற்கு அதிஷ்டத்தை பெருக்க , வீட்டு வாசலில் தெய்வ பொருட்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
வீட்டு வாசலில் உருளியில் தண்ணீரை நிரப்பி அழகாக மலர்களை நீரில் போட்டு வைக்க வேண்டும்.
வீட்டு வாசலில் சூரிய ஒளி படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அன்றாடம் வீட்டு வாசலில் அரிசி மாவு கொண்டு அழகாக கோலம் போட்டு வைப்பது லட்சுமி கடாட்ச்சத்தை ஏற்ப்படுத்தும்.அரிசி மாவில் கோலம் இடுவது , சிறு உயிரினங்களுக்கு உணவாகவும் அமையும்.
வீட்டு வாசலில் சாயங்காலம் தீப விளக்குகளை ஏற்றி வைப்பது, நல்ல வெளிச்சமாகவும் மங்களகரமாகவும் இருக்கும்.
குப்பைகள், உடைந்த பொருட்கள், செருப்புகளை வீட்டு வாசலில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிஷ்டத்தை தரக்கூடிய மணி பிளான்ட் செடிகளை வீட்டு வாசலில் வளர்ப்பது நன்மைகளை தரும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..