பெரியார் சிலையை தொட்டால் பாஜக ஆட்சியே இல்லாம போயிடும்..!! கடுப்பான ஆர்.எஸ்.பாரதி..!!
ஸ்ரீரங்கம் கோவில் அருகே இருக்கும் பெரியார் சிலையை நீக்கினால் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி தூக்கி வீசப்படும் என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் பெருமாள் கோவிலின் முன்பு திமுகவிற்கு சொந்தமான நிலத்தில்.., கடவுள் மறுப்பு வாசகங்களுடன் கூடிய தந்தை பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
பாதயாத்திரை மூலம் நேற்று ஸ்ரீரங்கம் சென்ற அமைச்சர் அண்ணாமலை.., செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.., 1976ம் ஆண்டு பெரியார் சிலையை கோவிலின் முன்பு திமுக வைத்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன்.., முதல் வேலையாக இந்த சிலையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக நாயன்மார்களின் சிலை வைக்கப்படும்..
அண்ணாமலையின் இந்த பேட்சிக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சேகர்பாபுவின் பதிலடி :
இதற்கு இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு.., அதற்கு முதலில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். பாஜக ஆட்சி அமைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
அண்ணாமலை பகல் கனவு காண்பதை சற்று நிறுத்தி கொண்டால் அவருக்கு நல்லது.
ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி :
பாஜக ஆட்சிக்கு வந்தால் தந்தை பெரியார் சிலையை தான் நீக்குவார், ஆனா திமுக நினைத்தால் பாஜகவே இல்லாமல் செய்து விடுவோம். மத்தியில் உள்ள பாஜக ஆட்சி தூக்கி வீசப்படும்.
பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில்.., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.. பெரியார் சிலையை அகற்றுவது பற்றி நான் சொன்னது தவறு என மன்னிப்பு கேட்டுள்ளார்.
கனல் கண்ணன் கைது :
சண்டை மாஸ்டரும் பாஜகவின் பிரமுகரும் ஆன கனல் கண்ணன்., ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை தகர்ப்பேன் என பேசியுள்ளார்.
இதானல் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி கனல் கண்ணன் மீது வழக்கு பதிவானது.., வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் கனல் கண்ணன் நேற்று தலைமறை வாகியுள்ளார்.
தலை மறைவான கனல் கண்ணனை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..