ஒரே சொல்லில் பாஜகவை மிரள வைத்த கனிமொழி எம்.பி..!!
விரைவில் எம்.பி தேர்தல் வர உள்ள நிலையில் திமுக மட்டுமே அதிக அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ.களை கொண்ட கட்சியாகவும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் மதிமுக.., போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சிறந்த கட்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுக அதிரடியான செயல்களை செய்துள்ளது.
அமைச்சர் உதயநிதி :
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து இவருக்கு தரும் முன்னுரிமை கூட தற்போது கனிமொழி அவர்களுக்கு கொடுக்கவில்லை என சில பேச்சுக்கள் வெளி வர தொடங்கியது.
இதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தான் கனிமொழி.., உதயநிதியின் தூத்துக்குடி மீட்டிங்கில் பங்கேற்கவில்லை என்றும் சில தகவல்கள் வெளியானது.
தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சி மீட்டிங்கிற்கு எம்.பி கனிமொழி அவர்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்கப்பட வில்லை, கீத ஜீவனும் தரப்பு செய்யவில்லை என எத்தனை சீக்ரட் வெளிவந்து கொண்டிருந்த நிலையில்.., அதற்கு கனிமொழி எம்.பி பதில் அளித்துள்ளார்.
இந்த தேர்தல் சமையத்தில் எத்தனையோ வதந்திகள் வெளிவரும்.., அவை அனைத்தையும் சுக்குநூறாக அடித்து நொறுக்கி தேர்தல் பணிகளை செய்து.., முடிப்போம்.
தூத்துக்குடி சம்பவம் :
கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கனிமொழியின் உழைப்பும் பங்களிப்பும் அதிகமாகவே இருந்தது.
பொள்ளாச்சி சம்பவம் மற்றும் சாத்தன்குளம் சம்பவத்திற்காக கனிமொழி போராட்டத்தில் இறங்கி மக்களுக்காக பாடுபட்டார்.
இந்த காரணங்களால் தான் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி கனிமொழி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
பதவி கிடைத்த உடன் மு.க.அழகிரி எப்படி செயல்பட்டாரோ அவரை போலவே சிறப்பாக செயல்பட்டு தென்மண்டல தொகுதியை தன்வசம் கொண்டு வந்தார்.
இந்த முறை தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நின்றாள்.., அவருக்கு வெற்றி கிடைக்கும் என்பது உண்மை என திமுக வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.
பாஜகவிற்கு பதிலடி :
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் “அறநிலையத்துறை என்ற ஒன்று நாளில் இருக்காது” என அண்ணாமலை பேசியிருக்கிறார்..
அதற்கு எம்.பி கனிமொழி, முதலில் பாஜக “ஆட்சிக்கு வந்தால் தானே..? பாஜக ஆட்சிக்கு வந்தால் பார்க்கலாம்” என பதிலடி கொடுத்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..