ADVERTISEMENT
தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் அவதி…
மயிலாடுதுறையில் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் வடிவால் வசதி இல்லாமல் தேங்கிய மழை நீரால் தீயணைப்புத் துறையினர் அவதியடைந்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் சராசரியாக 68.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனால் அங்குள்ள தீயணைப்பு துறை வளாகத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
பேரிடர் காலத்திற்கு பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தீயணைப்பு துறை வளாகம் அருகே மழை நீர் வடியும் வடிகால் தூர்ந்து போய் சரி செய்யப்படாமல் உள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தூர்ந்துபோயுள்ள வடிகாலை சீரமைத்தால் மட்டுமே தீயணைப்பு துறை வளாகத்தில் தண்ணீரை வடியவைக்க முடியும் என்று அங்குள்ள தீயணைப்பு துறை வீரர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.