மூதாட்டி தனது மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருப்பூரில் சொத்து பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தனது மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அருக்காணி மற்றும் அவரது அக்கா மாரத்தாள் அகிய இருவருக்கும் சொந்தமான பூர்வீக சொத்து திருப்பூர் மாவட்டம் முத்து கவுண்டம்பாளையத்தில் உள்ளது.
இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், மாராத்தாள் மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் அருக்கானிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் , இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், மனு அளிக்க வந்த அருக்காணி மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கள் உடலில் மன்னனை ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றனர்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)