விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
குடும்ப நலத்துறையில் மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை, துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
நிகச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு குடும்ப நலத்துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது குறித்தான விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சை குறித்த முழுவிவரம் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என தெரிவித்த அவர், தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறினார்
இதனிடையே, தேமுதிக தரப்பில் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும், செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வெளியான தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.