ADVERTISEMENT
பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரச்சாரம்!!
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே இரு முனைப்போட்டி நிலவி வரும் நிலையில், பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள மாநில கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இணைந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை வட்டியில்லா கடன், சமையல் எரிவாயு 400, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 4 லட்சம் அரசு வேலைகள், 10 லட்சம் வேலைவாய்ப்புகள், சிரஞ்சீவி காப்பீட்டு திட்டத்தின் தொகை 50 லட்சமாக உயர்வு, உள்ளிட்ட வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் வல்லப்நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசினார்.
மேலும், சாதி வாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் எக்ஸ்-ரே போன்றது என தெரிவித்த அவர், பழங்குடியினர் நலனை பாதுகாப்பதில் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்தார்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.