“மீன் மார்க்கெட்டிற்கு மீன்வரத்து அதிகரிப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி-பழவேற்காடு”
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டு மீன் மார்க்கெட்டிற்கு மீன்வரத்து அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 69 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் முகத்துவாரம் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன் தூர்ந்து அடைபட்டது. இதனால் கடந்த 15 தினங்களாக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.
தற்போது கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக ஏரியிலிருந்து கடலுக்கு செல்லக்கூடிய நீரின் அளவு கூடி இருப்பதால் அவ்வழியாக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க சென்றனர்.
குறைவான அளவிலேயே படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போதும், பழவேற்காடு மீன்மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.