ADVERTISEMENT
“உடல் பருமன் அறுவை சிகிச்சை துறை பிரிவின் 20 ஆம் ஆண்டு விழா”
கோவை ஜெம் மருத்துவமனையில் உடல் பருமன் அறுவை சிகிச்சை துறை பிரிவின் 20 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
கோவை இராமநாதபுரம் அடுத்த பங்கஜாமில் உள்ள, ஜெம்மருத்துவமனையில் உடல் பருமன் அறுவை சிகிச்சை பிரிவு துவங்கி 20வது ஆண்டு விழாவை கொண்டாடியது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் மா, சுப்ரமணியன், கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மருத்துவமனையில், ஓபிசிட்டி-க்யூர் (Obesity-Cure) மற்றும் டயாபடீஸ் க்யூர் (Diabetes Cure ) எனும் இரு சிகிச்சை பிரிவுகளை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து உடல் பருமன் சந்தேகங்களும், தீர்வுகளும் என்ற புத்தகத்தை அமைச்சர் மா, சுப்ரமணியன் வெளியிட, அதனை ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பழனிவேலு பெற்று கொண்டார்.
இந்த நிகழ்வில் ஜெம்மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.