ADVERTISEMENT
மதுராந்தகம் அருகே 50 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை பதுங்கி வைத்த இருவர் கைது..
மதுராந்தகம் அருகே 50 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை பதுங்கி வைத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் குட்காவை பதுக்கி வைத்திருப்பதாக, காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வசந்த வாடி கிராமத்தில் மளிகை கடை நடத்தி வரும் சீனிவாசன் மற்றும் அவரது மகன் மோகன் ஆகிய இருவரும், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனைதொடர்ந்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்காவே பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.