பிராகரன் உயிருடன் இருக்கிறார் என்று வைகோ தெரிவித்துள்ளார்!!
பிராகரன் உயிருடன் இருக்கிறார் என்ற எண்ணத்தில் தான் செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்வில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு அனைவருக்கும் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பிரபாகரன் மீண்டும் ஒரு நாள் வருவார் என்ற நம்மைக்கையுடன் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.
பிராகரன் உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, இலங்கை தமிழர்களுக்காக போராடிய தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனும் என்னத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மதிமுக பொருளாளர் செந்திலதிபன், மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், கழககுமார், டி.சி ராஜேந்திரன், பூவை பாபு, சைதை சுப்பிரமணியன், மா.வை. மகேந்திரன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.