ராணிப்பேட்டையில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் கோரிக்கை…
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமகவினர் கோரிக்கை மனுவினை வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த முள்ளுவாடி ஊராட்சி கலவை கூட்ரோடு பகுதியில் புதியதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மேற்குமாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், புதிய மதுக்கடை உள்ள பகுதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், மது கடை மூலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலும் உருவாகும் என்பதால் புதிய மதுக்கடை அமைக்கும் முயற்சியை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி மனுவை வழங்கினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.