பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியும், பிரபல நடிகையுமான அனுசுயா ரசிகர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
நடிகை அனுசுயா ‘ரங்கஸ்தலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் படம் ‘புஷ்பா’ படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படம் தொடர்பாக எதிர்மறை கருத்தை அனுசுயா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அவரை வசைபாடியுள்ளார்.
அதில் ஒரு சில ரசிகர்கள் அவரது வயதைக் காரணம் காட்டி ஆண்ட்டி என அழைத்துள்ளனர். இதனையடுத்து தனக்கு 37 வயதுதான் ஆகிறது, என்னை அப்படி அழைக்கவேண்டும் என அனுசுயா பதிவிட தொடர்ச்சியாக ரசிகர்கள் அவரை ஆண்ட்டி என்றே அழைத்தனர்.
இது சமூகவலைத்தளங்களில் ஆண்ட்டி என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இது பெண்களை துன்புறுத்துவதற்கு சமம்ம் தொடர்ந்து அப்படி அழைத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் இது என் கடைசி எச்சரிக்கை என்று அனுசுயா பதிவிட்டுள்ளார்.