கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டை உடைத்து 25 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை..
கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டை உடைத்து 25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ்நகரைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் மதுரையில் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி மகனை பார்ப்பதற்காக சந்திரமோகனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு தேனிக்கு சென்றனர்.
இந்நிலையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மரம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 25 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.