ADVERTISEMENT
9 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு..
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் பகுதியில் 9 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த குனிச்சு மோட்டர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் மற்றும் கீதா ஆகியோரின் மூன்றாவது பிள்ளையான பூவரசன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
