ADVERTISEMENT
வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஊடகங்கள் பேசவில்லை…
நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஊடகங்கள் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக எம்.பி.க்கள் ஓடிவிட்டதாகவும், ஆனால் இதை ஊடகங்களில் ஒளிபரப்பவில்லை எனவும் தெரிவித்தார்.
இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தலையே உணர்த்துவதாக தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாங்கள் ஒன்றுபட்டால் பிரதமர் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது என பேசினார்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.