பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் டீசல் திருட்டு…
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் மர்ம நபர்கள் டீசல் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதற்காக மாலை நேரங்களில் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, காலையில் மாணவ மாணவிகளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் தொடர் டீசல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் டீசல் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.