ADVERTISEMENT
செயின்ட் பால்ஸ் பள்ளிகளில் கிறிஸ்மஸ் விழா குடில் திறப்பு விழா
மதுராந்தகம் செயின்ட் பால்ஸ் பள்ளிகளில் கிறிஸ்மஸ் விழாவையொட்டி குடில் திறப்பு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் செயின்ட் பால்ஸ் பள்ளியில் கிறிஸ்மஸ் விழாவையொட்டி குடில் திறப்பு விழா நடைபெற்றது.
இயேசுவின் பிறப்பை குறிக்கும் விலங்கு சொரூபங்கள் அமைக்கப்பட்டு அதன் நடுவே இயேசு பிறப்பது போல் குடில் அமைக்கப்பட்ருந்தது.
அக்குடிலை தாளாளர் தந்தை அருட்பணி வேளாங்கண்ணி திறந்து வைத்து கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார். பின்பு அப்பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பள்ளியின் முதல்வர் மரியாஅமுதா, ரோஸ்லின்மேரி மற்றும் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.