புதிய வகை கொரோனா தொற்றுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை
புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள ஒன்றிய சுகாதார துறை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 091-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேபோல், நாடு முழுவதும் புதிய வகை கொரோனா ஜெஎன்.1 பரவி வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 162 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், தமிழக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
சென்னையில் 10-வது வார சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
