நீட்முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வுக்குத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது, இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியானது.
இதை தொடர்ந்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்.1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்திலையில் நீட் தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாளை வெளியிடாத மருத்துவ தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை பட்டியலிட மனுதாரர் கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடை இல்லை என அறிவித்துள்ளது.