68 சமூகத்தவர்களுக்கு, சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்க மதிமுக துரைவைகோ கோரிக்கை…
68 சமூகத்தவர்களுக்கு, சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் மதிமுக முதன்மைச்செயலாளர் துரைவைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த குளறுபடியால், தமிழகம் முழுவதும் உள்ள ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும், ஒன்றிய அரசு உரிமைகளைப் பெறுவதற்கு சீர்மரபு பழங்குடியினர் எனவும், மாநில அரசு உரிமைகளை பெறுவதற்கு ‘சீர்மரபு வகுப்பினர் எனவும் ‘இரட்டை சாதிச்சான்றிதழ்’ வழங்கும் அநீதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனை அவரது இல்லத்தில் சந்தித்த துரை வைகோ, தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்களுக்கு, சீர்மரபு பழங்குடியினர் என்னும் ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.