மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி
இணக்கமாக உள்ள பாஜக அரசிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி மருத்துவக் கல்லூரிகள் கேட்டு பெறலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1.77 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த, அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட அமைக்கப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, மருத்துவக் கல்லூரியை புதிதாக அமைப்பது மட்டும் வேலையில்லை என தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.