பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் அளப்பரிய சாதனைகளை செய்பவர்களுக்கு, ஒன்றிய அரசு சார்பில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்படுகிறது.
அண்மையில் பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ஆகியோருக்கு ஒன்றிய அரசு ‘பாரத ரத்னா’ விருது அறிவித்தது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் ஆகியோருக்கும், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.