கொடைக்கானலில் பெரும்பள்ளம் வனப் பகுதியில், நள்ளிரவு திடீரென காட்டுத்தீ…
கொடைக்கானல் அருகே உள்ள பெரும்பள்ளம் பகுதியில் நள்ளிரவில் திடீரென காட்டுத்தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரும்பள்ளம் வனப் பகுதியில், நள்ளிரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
மலமலவென பரவிய காட்டுத் தீயினால் அப்பகுதியில் உள்ள செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகின.
தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த காட்டுத்தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.