” தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி ஸ்ரீபதி “
உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி, தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி எனும் பெருமையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி (TNPSC) சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி எனும் ஒற்றை ஆயுதம் மூலம் எளிய பிண்ணியில் இருந்து கடும் போராட்டத்திற்கு பிறகு நீதிபதியாகி உள்ள ஸ்ரீபதியை, வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.