போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்து பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்து பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக, சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும், தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தி பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில், சாலைபாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகை மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.
மேலும், பேரணியில் நிறைவாக போக்குவரத்து காவலர் சதீஸ் என்பவர் சாலை பாதுகாப்பு குறித்த பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.