ADVERTISEMENT
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் 2022–2023 சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை சார்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி மதுரை திருப்பாலையில் உள்ள யாதவா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தினை துவங்கி வைத்தார்.
86 கோடி மதிப்பில் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்களை, 420 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.