ராணிப்பேட்டையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த மூன்று கொள்ளையர்கள்
ராணிப்பேட்டையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த மூன்று கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் கூட்ரோடு பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது. அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் நான்கு சவரன் தங்க நகை மற்றும் 4 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஹரிகுமார், அருண்குமார் மற்றும் ஆனந்த ராஜ் ஆகிய மூன்று பேரும் தனியாக நடந்து வந்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின் நகையின் உரிமையாளர் சுமதியிடம் நகை மற்றும் பணத்தை ஒப்படைத்த காவல்துறையினர், மூன்று நபர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.