தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டமா..?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாலை வசதி வடிகால் வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி அப்பகுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்களுக்கு தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் வசதி, மின்விளக்கு என எந்த அடிப்படை வசதிகளும் முழுமையாக நிறைவேற்றி தரப்படவில்லை.
பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளததால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த பின்னரே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.