ADVERTISEMENT
ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு..??
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
வத்திராயிருப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரப்படுகிறது என அரசு தரப்பு விளக்கம் அளித்தது.
மேலுன், அரசாணையில் குறிப்பிடாத இடங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தர மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.