33 Total Views , 1 Views Today
குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று காந்திநகர் முதல் மும்பை வரை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை காந்திநகர் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் மோடி அவர்கள் காந்தி நகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையம் வரை ரயிலில் பயணம் செய்து உள்ளார்.
அதை தொடர்ந்து அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தையும் அவர் தொடங்கி வைக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டு கழித்தார். இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இருந்து புறப்பட்டு கான்பூர் – அலகாபாத் வழியாக வாரணாசி வரையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் ஆகும்.