ADVERTISEMENT
திருப்பூரில் இரயில் மறியல் போராட்டமா..? ஏன்..?
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் அதற்கு பல்வேறு அரசியல் எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்புகளை தெரிவிதனர்.
இந்நிலையில் மதம், மொழி பெயரால் இந்திய மக்களை பிரிக்கும் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இரயில் மறியல் ஈடுபட முயற்சி செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.