ADVERTISEMENT
ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது..
ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், மாநில உரிமையை பறிக்கும் வகையில் தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு இதுபோன்ற அழுத்தத்தை தருவதாக தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை திறக்க தமிழக அரசு முன்வந்ததாக வெளியான தகவலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசிய அவர், பிஎம் ஸ்ரீ பள்ளிகளை திறக்கும் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய மாநில அளவில் குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.