தமிகத்தில் தாமரை மலராது..!! மோடிக்கே இது தெரியுமா..?
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது எம்எல்ஏவாக தொடரும் பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அளித்தால் அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.
ஆனால் அதற்கு பதிலாக தமிழக ஆளுநர் பொறுப்பு வழங்க முடியாது என மத்திய பாஜக அரசின் பிரதிநிதிபோல் செயல்படுகிறார். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாகமாகவும், எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் தேர்தல் அறிவிப்பதற்கு 3 மாதத்திற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். திமுக கூட்டணிக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் ஆணையம் மூலம் மிகக் குறைந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையமே மோடியின் பிடியில் உள்ளது. பாஜக கூட்டணிக்கு யார் யாரையோ அழைத்துப் பார்த்தார்கள். யாரும் வராததால் தற்போது பாமகவை சேர்த்துள்ளனர்.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்து, தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..