பாஜக 20..!! அண்ணாமலை வெளியிட்ட அந்த அப்டேட்..?
பாஜக கூட்டணியில், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியன் மற்றும் இளங்கோயாதவ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரசுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகள் உடனான ஒப்பந்தம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பாஜக 20 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் நான்கு இடங்கள் என மொத்தம் 24 இடங்களில் தாமரை சின்னம் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..