மீண்டும் தொடங்கிய காசா போர்..!! மோசமான சூழலில் ஹமாஸ்..!!
காசா மருத்துவ வளாகத்திற்குள் பாதுகப்பு படையினர் நுழைந்து நடத்திய தாக்குதலில் 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை, காசா பகுதியில் உள்ள மிக பெரிய ஷிபா மருத்துவமனையில் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதனை அறிந்ததும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
வளாகத்திற்குள் படையினர் நுழைந்து நடத்திய தாக்குதலில் நேற்று காலை 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுவரை வளாகத்திற்குள் 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளை படை வீரர்கள் படுகொலை செய்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய 160 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்துவதற்காக அவர்கள் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை வளாகத்தில் கண்டறியப்பட்ட ஆயுதங்களையும் வீரர்கள் கைப்பற்றி உள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..