முக்கிய கட்சி பிரமுகர் கொண்டு சென்ற பணம் பிடிப்பட்டது..!! கையும் களவுமாக சிக்கிய அந்த கட்சி..?
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறு உள்ளது.
தேர்தலில் பணம் புழக்கம், பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் மூலம் ஓட்டை வாங்க சில கட்சிகள் முயற்சிப்பதால் அதனை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் 50,000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமோ அல்லது நகையோ உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் உடனே அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் அலுவலகர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மேற்பவர்கள் மீது தேர்தல் பறக்கும் படையினர் கடும் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
சிக்கிய அதிமுக கட்சி :
இந்நிலையில் திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பேரவையின் மாநில இணைச்செயலாளருமான குணசேகரன் தனது காரில் பாத்திரங்களை ஏற்றி சென்றுள்ளார்.
அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால் காரில் இருந்த அதிமுக நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காரில் இருந்த பாத்திரங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பாத்திரங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். அதிமுக நிர்வாகிகள் கொண்டு வந்த பாத்திரத்தின் விலை 5 லட்சத்திற்கும் மேல் இருக்குமென தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..