தொடரும் ஆன்லைன் லோன் அட்டூழியம்..!! மோசடியில் சிக்கிகொண்ட பெண்..!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயது பெண்மணி, இவர் டெய்லாராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்ப மருத்துவ தேவைக்காக ஆன்லைனில் ஒரு செயலில் (மணி பைன்) கடன் பெற்றுள்ளார். அந்த செயலில் ரூ.3007, ரூ.3510, ரூ.6200 என்ற 3பிரிவுகளில் கடன் அப்ளை செய்து கடன் பெற்றுள்ளார்.
அவருக்கு 7000 ரூபாய் வரை பணம் கடனாக கிடைத்துள்ளது. 8 நாள், 9நாள், 10நாள் என 3பிரிவுகளாக பணத்தினை திரும்ப செலுத்த கூறியுள்ளனர். அதன்படியே கடந்த 20ந்தேதி ரூ12500 என அனைத்தையும் திரும்ப செலுத்தியுள்ளார்.
ஆனால் இன்னும் தங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று அந்த பெண்மணிக்கு வாட்ஸ் அப் கால், வாட்ஸ் அப் மெசஜ் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. ஒரு நபர் மட்டுமல்லாது ஆண், பெண் என வித்தியாசம் இல்லமால் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் பணத்தினை செலுத்த வலியுறுத்தி தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
தாங்கள் சொன்ன பணத்தினை செலுத்தாவிட்டால் அந்த பெண்ணின் புகைப்படத்தினை ஆபசமாக சித்திரிப்பு செய்து, அவரது செல்போனில் இருந்து அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைத்து விடுவோம், இணைய தளத்தில் பதிவு செய்து விடுவோம் என்று மிரட்டியதால் வேறு வழியில்லமால் வெளியே கடன் வாங்கி மீண்டும் செயலிக்கு ஆன்லைனில் பணம் செலுத்தி உள்ளார்.
இருந்த போதிலும் மீண்டும் மீண்டும் பணம் செலுத்த வலியுறுத்தி தொடர்ந்து மிரட்டல் வந்தால் மனமுடைந்த அந்த பெண்மணி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் போலீசார் அந்த பெண்ணிடம் பேசிய தைரியம் கொடுத்தது மட்டுமின்றி இது குறித்து சைபர் க்ரைமில் புகார் அளிக்க சொன்னது மட்டுமின்றி தைரியமாக இருக்க வேண்டும், இனி மிரட்டினால் பணம் தர வேண்டாம் என்று சொன்ன பிறகு தான் பெண் தனது தற்கொலை முடிவினை மாற்றியுள்ளார்.
இது குறித்து அந்த பெண்மணி கூறுகையில் தனது குடும்ப தேவைக்காக தெரியமால் அந்த செயலில் பணத்தினை கடனாக பெற்றதாகவும், அனைத்தையும் முறையாக செலுத்திய பின்னர் கூடுதலாக பணம் செலுத்த வலியுறுத்தி மிரட்டியதாகவும், பணம் தரவில்லை என்றால் தனது படத்தினை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவோம் என்று சுறியதால் மீண்டும் பணம் செலுத்தியதாகவும், ஆனால் தன்னை விடமால் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் இருந்தாகவும், இது குறித்து தெரிந்த எனது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.
இதையெடுத்து உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தன்னிடம் பேசிய தைரியம் கொடுத்தது மட்டுமின்றி, இது போன்ற மிரட்டல்களுக்கு பயப்பட வேண்டும், சைபர்க்ரைமில் புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் தனது எண்ணத்தினை மாற்றிக்கொண்டதாகவும், கடந்த 4 நாள்களாக கடும் மன உளைச்சலுக்குள்ளாகியதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..