தொடரும் தருமபுரம் ஆதினம் வழக்கு..!! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு.? அகோரத்திற்கு இனி..?
செய்தி சுருக்கம் :
தருமபுரம் ஆதீனகர்த்தரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதாகி மயிலாடுதுறை கிளைச் சிறையில் உள்ள பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அவர், ஆசிரம்பதிற்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும், ஆபசமாக நடந்துகொள்வதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறி சில மர்ம நபர்கள் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வீடியோ, ஆடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பதறி போன ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, இது பற்றி அவரது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். பின் யதாக ஆதீனகர்த்தரின் சகோதரரும், அவரது உதவியாளருமான விருத்தகிரி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதி புகார் அளித்தார்.
புகாரின் ஏற்ற காவல்துறையினர் அந்த எண்ணை ட்ராக் செய்து பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது மயிலாடுதுறை போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கலைமகள் கல்வி குழுமத்தின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், வினோத் ஆகிய 4 பேரை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கைது செய்தனர்.
தொடர்ந்து மகாராஷ்டிரம் மாநிலம் ராய்கர் மாவட்டம், அலிபாக்கில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அகோரத்தை கடந்த 15-ம் தேதி மயிலாடுதுறை தனிப்படை போலீஸார் கைது செய்து அழைத்து வந்து திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி மார்ச் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி அகோரத்தை விசாரனைக்காக ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அகோரத்தை போலீசார் விசாரணைக்கு மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் மார்ச் 27 மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..