96 ராம் ஜானுக்கு கல்யாணமா..? ஷாக்கான ரசிகர்கள்..!!
96 படத்தின் மூலம் அறிமுகமான கெளரி கிஷன் ( ஜானு ) ஆதித்யா பாஸ்கர் ( ராம் ) நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தனர். அதிலும் நம்ப குட்டி வயசு ஜானு 96, கர்ணன் மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்தார்.
ஆனா 96ற்கு நிகர் எதுவும் இல்லை என சொல்லும் அளவிற்கு அந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஆன் ஸ்கிரீனில் நடிக்கும் நடிகர்கள் நிஜத்தில் ஜோடியாவது போல.., இவர்கள் ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும் என்ற பல ரசிகர்கள் சொன்னதால் என்னவோ. இவர்கள் தற்போது தாலி கட்டிய படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அதற்கு பின் தான் தெரியவந்தது. இது ஹாட்ஸ்பாட் படத்திற்கான லுக் என்று.
மற்ற படங்களை போல் பையன் பொண்ணுக்கு தாலி கட்டி கதையை கொண்டு போகாமல்.., ஹீரோயின் ஹீரோவிற்கு தாலி கட்டுறா மாதிரி எடுத்து இருக்குறதுனால நிச்சயம் இந்த படம் ஹிட் கொடுக்கும் என்று கெளரிகிஷன் ரசிகர்கள்.., பதிவிட்டு வருகின்றனர்.