நாதக வெற்றி பெற்றால் சாதனை அல்ல சரித்திரம்..!! மோடிக்கு பயமா..? திருநெல்வேலியில் சீமானின் பிரச்சாரம்..!!
லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் நன்கு சூடு பிடித்துள்ளது. யார் வெற்றிபெறுவார் என மக்கள் எதிர்பார்க்கும் நாளை விட.., தினம் தினம் அரசியல் கட்சி தலைவர்கள் செய்யும் பிரச்சாரத்திற்கே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வாகையில் நாம் தமிழர்கட்சியின் சீமானின் பேச்சிற்கு தமிழகத்தில் பல இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. ஆனால் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாதக கட்சிகளுக்கு அவர்களுக்கான சின்னம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. அதனை எதிர்த்து சீமான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அவருக்கு மைக் சின்னம் கொடுக்க தீர்ப்பு வெளியானது.
சின்னத்தை அறிமுக படுத்தும் விதமாக மார்ச் 27ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்த போது “ரத்தகொதிப்பே.., ரத்த கொதிப்பே” என்ற பாடல் ஒலித்ததால் சீமான் கடுப்பாகினர்.
அதனை தொடர்ந்து திருநெல்வேலியில் இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, ஆலங்குளத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிக்க தொடங்கினார். அப்போது பேசிய அவர், மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. ஒற்றைக் கட்சி ஆட்சி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் விதமாக மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டார்கள்.
அதிகார பரவலாக்கம் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை. மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால், அது ஒரு சாதாரண நிகழ்வு. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அது சரித்திரம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி மாற நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும். ஹிந்தி அறிந்தவர்கள் மட்டும் பிரதமர் ஆகவும், அமைச்சர் ஆகவும் இருந்து நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மோடி ஜனநாயகதிற்கு விரோதமாக செயல்படுகிறார்.
சுயநலத்திற்காக மட்டும் தமிழகம் வந்து பாசம் என்ற வேஷம் போடும் மோடிக்கு.., தமிழக மக்கள் யார் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். நம் விவசாய சின்னத்தை நம்மிடம் இருந்து அவர்கள் பறித்து வேறு கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது வெறும் சின்னம் அல்ல நாம் எங்கு தோற்று விடுவோமோ என்ற தோல்வி பயத்தில் இப்படியாவது நாம் ஜெயிக்க மாட்டோமா என்ற மோடியின் எண்ணம். வருகின்ற தேர்தலில் உங்களின் தலைவர் யார் என்பதை பார்த்து வாக்களியுங்கள் என இவ்வாறே சீமான் பேசினார்.