லைப்ல இந்த தவற மட்டுமே பண்ணவே பண்ணாதீங்க..!! அப்புறம் உங்களுக்கு இதே நிலைமை தான்..!!
சென்னை திருமுல்லைவாயல் பகுதியை மகேஷ் என்ற பள்ளி மாணவன் நேற்று மாலை தனது வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு மொபைல் போனில் பேசியுள்ளான்..,
அப்போது, வீட்டின் அருகே இருந்த மின்கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய நிலங்களுக்கு மேலே அல்லது வீட்டின் அருகே உயரழுத்த மின்கம்பிகள் சென்றாலோ அல்லது மின்கோபுரங்கள் இருந்தால் அந்த நிலத்தை வாங்கும் மக்கள் மின்சார வாரியத்திடம் தகவல் கொடுப்பதில்லை. அப்படி கொடுக்காமல் விடும் மக்கள் மின்கம்பிகள் இருக்கும் இடத்தில் குட்டைப் பயிர்களைப் வளர்க்குமாறு அரசாங்கம் அறிவுறுத்துகிறது. ஆனால் அதையும் மக்கள் கேட்க மறுக்கிறார்கள்.
மின்கம்பிகளுக்கு கீழே நின்று செல்போன் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு :
செல்போனில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சுக்கும் உயரழுத்த மின்கம்பிகளில் செல்லும் மின்சாரத்திற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. அதற்குக் கீழே நின்று செல்போன் பயன்படுத்தினால், எந்தக் குறுக்கீடும் ஏற்படாது.
ஆனால், “உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நின்று செல்போன் பேசினால், ஒருவித இரைச்சல் ஏற்படும், செல்போன் சிக்னல் குறைவாகக் கிடைக்கும். மற்றபடி செல்போன் பேசுவதால் ஒருவர் மீது மின்சாரம் பாயாது.
ஏனெனில் உயரழுத்த மின்சாரமாகட்டும் அல்லது வீட்டில் பயன்படுத்தும் மின்சாரமாகட்டும், கம்பிகள் அல்லது ஒரு மின்கடத்தி இல்லாமல் அதைக் கடத்த முடியாது.
அதே சமயம், காற்று என்பது ஒரு இன்சுலேட்டர் மின்கடத்தாப் பொருள். “காற்றில் ஈரப்பதம் கூடும்போது, இந்த மின்கடத்தும் தன்மை குறையும். அத்தகைய சூழலில் வீட்டின் மேலே உயரழுத்த மின்கம்பிகள் செல்லும்போது, நிலத்துக்கும் கம்பிகளுக்கு இடையே நாம் நின்று கொண்டிருந்தால், நாமும் ஒரு மின்கடத்தியாக மாறிவிடுவோம்”.
அந்த சமயங்களில் நாம் செல்போன் பயன்படுத்தும் போது, முன் அறிகுறியாக செல்போனில் சிக்னல் கட் ஆகி காதின் ஓரங்களில் வெப்பக்காற்று வீசும். போது அதன் கீழே நின்று கொண்டு போன் பேசினால், அதலில் இருந்து வரும் வெப்ப சலனமே நம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும். “அதுபோல மின்காந்த கதிர்வீச்சால் அல்லது செல்போன் கோபுரங்களால் புற்றுநோய் போன்ற நோய் போன்ற அபாயங்கள் ஏற்படவும் வாயுப்புக்கள் அதிகம் உள்ளது.
இன்னும் எடுத்துக்காட்டுடன் சொல்ல வேண்டும் என்றால் ரயில் நிலையங்களில் அல்லது ரயிலின் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் உரசி, சிலருக்கு மின்சாரம் பாய்ந்ததாக செய்திகள் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் நிலத்திற்கும் கம்பிகளுக்கும் இடையே ஒரு மின்கடத்தியாக மனித உடல் மாறிவிடுதால் தான்.
இந்த மாணவன் மகேஷிற்கும் இது தான் நடந்திருக்கும் எனவே. மின்கம்பங்கள் அல்லது மின்சாரம் அதிகம் பாயும் இடத்திற்கு கீழே நின்று போன் பேசுவதை தவிர்ப்பதே சிறந்தது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..