கோடையில் பயன்படும் சில டிப்ஸ்… பார்க்கலாம் வாங்க…
-
கோடையில் தினமும் ஒரு மூன்று லிட்டராவது தண்ணீர் பருக வேண்டும். இது உடல் சூட்டை தவிர்த்து உடலை குளிர்ச்சியடைய செய்கிறது.
-
கரும்புச்சாறு வெயிலுக்கு ஏற்ற சிறந்த பானம்.
-
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் “பேக்’ போட்டுக் கொள்ளலாம்.
-
சிறிது எலுமிச்சை சாற்றை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் வியர்வை வாசனை நீங்கும்.
-
பண நுங்கை உகையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டால் வெயிலுக்கு ஐஸ்க்ரீம் மதிரி இருக்கும்.
-
மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து வெயிலுக்கு இதமாக குடித்து வரலாம். தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும் உடலுக்கும் ரொம்ப நல்லது.
-
வெயில் காலத்தில் தினமும் இதில் ஏதாவது ஒன்றாவது பருக வேண்டும். அதாவது இளநீர்,மோர் மற்றும் எலும்பிச்சை சாறு.
-
மொட்டை மாடியிலும் முன் முற்றத்திலும் தென்னை ஓலையில் கொட்டகை கட்டிவிடுங்கள். இரவில் ஓலையில் நீர் தெளித்துவிட்டால் ஏ.சி.யில் இருப்பது போல இருக்கும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.