கேரளாவில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநாடு நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தொடங்கிய நிலையில் 4 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அதுல் குமார் அஞ்சான் ஆகியோர் சிறப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
#LIVE: திருவனந்தபுரம் | #CPI 24-ஆவது மாநில மாநாட்டில் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து சிறப்புரை https://t.co/ATKjTKeuIu
— M.K.Stalin (@mkstalin) October 1, 2022
இதில் கலந்து கொள்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு திமுக கட்சியினர், அரசியல் பிரமுகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஒரே தேர்தல், ஒரே நாடு என நோக்கி சென்றால் இறுதியில் ஒரே கட்சியாகி விடும் இதற்கு எதிரான குரல் தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் மாநில அரசின் உரிமைகளை பாஜக அரசு பறித்து வருகிறது. ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமைகள் பறித்து வருகிறது. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் கல்வி உரிமைகளையும் பாஜக அரசு பறித்துவிட்டது. இந்தியை திணிக்கும் முயற்சியே தேசிய கல்வி கொள்கை என இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.