காட்சி தர தயாரான கள்ளழகர்..!! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு..!! அதிர்ச்சியில் பக்தர்கள்..!!
மதுரை என்றால் மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூவிற்கு அடுத்து நினைவிற்கு வருவது மதுரை கள்ளழகர். ஏப்ரல் மாதம் என்றால் மதுரையில் களை கட்டும் திருவிழாவில் ஒன்று மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.
“உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஏப்ரல் 12ம் தேதி தொடங்கும் இந்த விழா, ஏப்ரல் 23ம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது..,
பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி, துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி வழிபடுவார்கள். அதற்காக 11 நாட்களுக்கு முன் இருந்தே பக்தர்கள் விரதமிருந்து ஆட்டு தோல்பையில் தண்ணீர் சுமந்து வந்து, சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவது வழக்கம்.
ஆனால், கடந்த ஆண்டு, பக்தர்கள் ஐதீகத்தை மீறி, பிரஷர் பம்புகளை பயன்படுத்தியும், தண்ணீரில் இரசாயனப் பொருள்களை கலந்தும் தண்ணீரை பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற தங்க வைர ஆபரணங்கள் சேதமடைந்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்களும் அதிகம் பாதிக்கபடுவதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில், கள்ளகர் மீதும் பீய்ச்சும் தண்ணீரை, தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு :
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இந்த கோரிக்கை மனு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரணை செய்த நீதிபதி.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி அடிக்க தடை விதித்துள்ளார். மேலும் பழைய பாரம்பரிய முறையில், தோல் பையை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் எனவும், குறிப்பாக கள்ளழகர், அழகர் மலையில் இருந்து வைகை ஆற்றிற்கு வரும் வரை இடையே எங்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி செயல்படுவோர் மீது, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு மதியம் வெளியானதை தொடர்ந்து பக்தர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும், மீண்டும் பராம்பரியம் முறையை பின் பற்றப்போகிறோம் என்ற சந்தோசம் எழுந்திருப்பதாக மதுரை மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொடியேற்றம் தொடங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் அதற்கான செய்லபாடுகளை தற்போது மதுரையின் முக்கிய பிரமுகர்கள் தற்போது தொடங்கியுள்ளனர். மேலும் திருவிழாவில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துமாறு மதுரை மாவட்ட பெண்கள் மகளிர் குழு மாலை 7 மணி அளவில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை அளித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..