வீட்டிற்கு வந்தே வாக்கா..? அந்த 4 தொகுதி..?
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ஆம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெற தேர்தல் ஆணையம் குழுக்களை அமைத்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் தபால் வாக்குப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வீடுகளுக்கே சென்று முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம் வாக்குக்களை பெற்று வருகின்றனர்.
சில மாவட்டங்களில் நாளைமுதல் தபால் வாக்குகள் பெறும் பணியை தொடங்கவுள்ளனர். அதேபோல், சென்னையில் 8 ஆம் தேதி முதல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..